நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலில் திருத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா – 2025

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலின் வருடாந்த உயர் திருவிழாவின் முக்கியமான திருத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா நிகழ்வுகள் புதன்கிழமை (ஜூலை 09) மற்றும் வியாழக்கிழமை (ஜூலை 10) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருத்தேர் திருவிழா புதன்கிழமை (ஜூலை 9)
அதிகாலை 3.30 – ஆயத்தமணி
அதிகாலை 4.00 – காலை சந்திப் பூசை
அதிகாலை 4.30 – கும்ப பூசை
காலை 5.30 – விசேட பூசை
காலை 6.00 – ஸ்தம்ப பூசை
காலை 7.00 – வசந்தமண்டப பூசை
காலை 8.30 – அம்மான் திருத்தேர் ஆரோகணம்
காலை 9.00 – திருத்தேர் பவனி ஆரம்பம்
காலை 10.30 – திருத்தேர் இருப்பிடம் அடைதல்
மாலை 4.00 – பச்சை சாத்தி, அம்மாள் அவரோகணம்

தீர்த்தத் திருவிழா வியாழக்கிழமை (ஜூலை 10)
அதிகாலை 3.00 – ஆயத்தமணி
அதிகாலை 3.30 – காலை சந்திப் பூசை
அதிகாலை 4.00 – கும்ப பூசை
அதிகாலை 5.00 – விசேட பூசை
காலை 5.30 – ஸ்தம்ப பூசை
காலை 6.15 – சூர்ணோற்சவம்
காலை 7.00 – வசந்தமண்டப பூசை
காலை 7.30 – தீர்த்தத் திருவிழாவிற்குப் புறப்படல்

இந்த திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், சிறப்பு போக்குவரத்து வசதிகள், மற்றும் விசேட உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து பக்தர்களும் நேர அட்டவணையை பின்பற்றி, பக்தி உணர்வுடன் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Share this Article