நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தமகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றையதினம் (ஜூன்21) காலைநடைபெற்றது. 

ஆலயத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, நாகபூசணி அம்மன், பிள்ளையார், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வரர்உள்ளிட்ட தெய்வங்கள் திருப்பல்லக்கு மனைப்பீடத்தில்எழுந்தருளச்செய்து, வடக்குக் கரையில் உள்ள தெம்மாங்கு தீர்த்தக்கரைக்குபவனியாக சென்று தீர்த்தமாடும் நிகழ்வு பக்திபூர்வமாக இடம்பெற்றது. தீர்த்தமாடும் நிகழ்வைக காண பெருமளவு பக்தர்கள் ஊர்வலமாக சென்று தீர்த்தக்கரையில் சூழ்ந்திருந்து தீர்த்தமாடி வழிபட்டனர்.

Share this Article