நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஜூன்07 கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தமகோற்சவம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(ஜூன்07) பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 15 தினங்கள் இடம்பெறவுள்ள திருவிழாவில் எதிர்வரும் ஜூன் 19இரவு சப்பர திருவிழாவும், மறுநாள் ஜூன் 20 பகல் தேர்த் திருவிழாவும், ஜூன் 21 காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன் தெப்பத்திருவிழா ஜூன்22 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெறவுள்ளது.

மகோற்சவ காலத்தில் ஆலயத்துக்கு வருகை தரவுள்ள பக்தர்களுக்காக தரைமற்றும் கடல் போக்குவரத்து வசதிகள், தாக சாந்தி நிலையங்கள், அன்னதானம்மற்றும் பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article