நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்று ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடு இன்றையதினம்(ஏப்.25) வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நாளையதினம் (ஏப். 26) வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்  செபமாலைமற்றும் அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு நற்கருணை ஆராதனைவழிபாடும்இடம்பெறும்.

நாளைமறுதினம் (ஏப்.27) சனிக்கிழமை காலை 8 மணிக்கு திருநாள் திருப்பலிஇடம்பெறவுள்ளதுடன் பக்தர்கள் அனைவருக்கும் மதிய போசனமும்வழங்கப்படவுள்ளது. சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் புனிதரின்திருச்சுருவ பவனி யானது நயினாதீவை சுற்றி வலம் வரவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article