நயினாதீவில் வீதி ஒன்றுக்கு பிக்கு ஒருவரின் பெயர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சூட்டப்பட்டநிலையில் அங்கு புதிதாக நடப்பட்ட பெயர்ப்பலகையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
“அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மன வத்தே தம்மகித்த திஸ்ஸ பெரஹெர மாவத்தை” என வீதிக்கு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த வீதிக்கு தற்போது புதிய பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் நேற்று(ஏப்ரல் 9) பரவலாகப் பகிரப்பட்டது.
அதேபோன்று குறிகாட்டுவான் இறங்கு துறையிலிருந்து நயினாதீவு விகாரைக்குச் செல்லும் நயினாதீவு விகாராதிபதியின் படகில் பயணிப்பவர்களுக்கு நீண்டகாலமாக வழங்கப்பட்டு வரும் பயணச் சீட்டில் நாகதீப என்று குறிப்பிடப்பட்டுள்ள விடயமும் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.