வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணிக்கு ஏறியது கொடி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மனுக்கு இன்று (ஜூன்26) பக்தர்கள் புடைசூழ கொடியேற்றம் நடைபெற்றது . இன்று நண்பகல் 12 மணிக்கு பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணில் அதிரஅம்மனுக்கு கொடியேற்றம் பக்திபூர்வமாக நடைபெற்றது.

இதேவேளை நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நலன் கருதி பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுச் சேவையானது இன்று (ஜூன் 26) தொடக்கம் 11.07.2025 ஆந் திகதி வரை காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை அரை மணிநேரத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில்சேவையில் ஈடுபடும்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து மற்றும் தனியார் பேருந்து என்பன யாழ் தரிப்பிடத்திலிருந்து மு.ப 5.30 மணி தொடக்கம் இறுதி படகுச்சேவைக்கமைய சேவையில் ஈடுபடுவதுடன், அரை மணித்தியாலத்திற்கு ஒருதடவை என்ற அடிப்படையிலும் சேவையில் ஈடுபடும்.

திருவிழா காலங்களில் பேருந்து 4.30 மணிக்கு பேருந்து தரிப்பிடத்திலிருந்துபுறப்படும். அத்துடன் இரவு பேருந்து சேவையானது படகுச் சேவைக்கமையசேவையில் ஈடுபடும்.

 குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியிலும் அதற்கு முன்னான வீதி ஓரங்களிலும்வாகனங்கள் தரிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள்அடியார்கள் மற்றும் பொதுமக்களை இறக்கிவிட்டு வாகனங்களுக்கெனஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில் தரிக்கப்படவேண்டும். இந் நடைமுறையினைகடைப்பிடிக்காதவர்கள் மீது பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 அடியார்களுக்கான மதிய மற்றும் இரவு உணவானது அமுதசுரபி அன்னதானசபையினரால் திருவிழா நாட்களில் வழங்கப்படவுள்ளது.

காவல்துறையினர் சீருடை மற்றும் சிவில் உடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள். மேலும் பொதுமக்கள், அடியார்கள் தங்களது பெறுமதிமிக்க பொருட்களுக்குஅவர்களே பொறுப்பாளிகள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Share this Article