வேலணை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட நயினாதீவில் ஜே/30 கிராம அலுவலர் பிரிவு கடற்கரையில் கரை ஒதுங்கிய பிளாஸ்டிக் இரசாயனமுலப்பொருள் அகற்றும் வேலைத்திட்டம் இன்றையதினம் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமையில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் இதன்போது இலங்கைவிமானப்படையினரும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.