நயினாதீவின் பிரதான மின் கட்டமைப்புடன் இன்று இணைக்கப்பட்டது புதியமின் பிறப்பாக்கி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நயினாதீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கலுக்கானஅனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் (ஜூன்07) சீரான மின்சார வழங்கல் நடைமுறைக்கு வந்துள்ளது என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

முன்பதாக மின்பிறப்பாக்கிகளில் அடிக்கடி ஏற்படும் தொழில் நுட்பக் கோளாறுமற்றும் அளவுக்கதிகமான விஸத்தரிப்பு போன்ற காரணங்களால் கடந்த பல நாட்களாக மின்வெட்டு காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களைசந்தித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

இந்நிலையில் இலங்கை மின்சார சபையினர் கடற்படையினரது உதவியுடன்சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கி ஒன்று கொண்டுசெல்லப்பட்டு நயினாதீவு மின்சாரநிலையத்தில் பொருத்தப்பட்டு பிரதான மின்மார்க்கத்துடன் இணைக்கப்பட்டுஇன்றையதினம் மாலை முதல்  மின்சார சேவை சீரான முறையில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share this Article