சிலாபம் கடற்பரப்பில் அரங்கேறிய பாரிய கடத்தல் முயற்சி ஒன்றை இலங்கை கடற்படையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர். நடுக்கடலில் இந்தியப் படகில் இருந்து உள்நாட்டு படகுகளுக்கு பொருட்களை மாற்றிக்கொண்டிருந்த போது இக் கைது நடைபெற்றது.

கடந்த ஏப்ரல் 28 சிலாபம் கடற்பரப்பில் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல், சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு படகுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதைக் கவனித்தது அவற்றை சோதனையிட்ட போது, 54 சாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோகிராமிற்கும் (2 தொன்) அதிக எடையுள்ள கடத்தல் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன
கடத்தலில் ஈடுபட்ட 04 இந்தியப் பிரஜைகள் பொருட்களைப் பொறுப்பேற்க வந்த கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 06 இலங்கையர்கள் என
மொத்தம் 10 சந்தேகநபர்கள் கைதாகினர்
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 01 இந்தியப் படகு மற்றும் 03 உள்நாட்டு டிங்கி படகுகள் என மொத்தம் 04 படகுகள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கடத்தல் பொருட்கள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுக சுங்கத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.