இன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவுக்கான சிறப்பு படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இதன்படி, நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து குறிகாட்டுவானுக்கு காலை 6.45 மணிக்கு வடதாரகை, 7 மணிக்கு சமுத்திரதேவி, மற்றும் முற்பகல் 10.30 மணிக்கு குமுதினி படகுகள் சேவையில் ஈடுபடுகின்றன. அதன்பிறகு, முற்பகல் 11.30 மணிக்கு கரிகணன், பிற்பகல் 1 மணிக்கு குமுதினி, 3 மணிக்கு சமுத்திரதேவி, மாலை 4.30 மணிக்கு வடதாரகையும் நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்கு பயணிக்கும்.
அதேநேரம், குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு காலை 8 மணிக்கு வடதாரகை, 8.15 மணிக்கு சமுத்திரதேவி, மற்றும் முற்பகல் 11.30 மணிக்கு குமுதினி சேவையில் செல்லும்.
மேலும், முற்பகல் 1 மணிக்கு கரிகணன், பிற்பகல் 2.30 மணிக்கு குமுதினி, மாலை 4 மணிக்கு சமுத்திரதேவி, மாலை 5.30 மணிக்கு வடதாரகையும் குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு பயணிக்கவுள்ளது.