யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் பொலிஸ் அதிகாரி திடீரென உயிரிழந்தார்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான சுபாஷ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.

10வது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் இன்று (நவம்பர் 14) நடைபெறுகிறது.

இந்தச் சூழ்நிலையில், உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் அமைந்த வாக்களிப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை (நவம்பர் 13) முதல் பாதுகாப்பு கடமையில் இருந்த அவர் இன்று (நவம்பர் 14) காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.

கடமையில் இருந்த பொலீஸ் உத்தியோகத்தர் மலசலக் கூடத்திற்கு சென்றதால் பல மணி நேரமாக திரும்பவில்லை. இதனால், கதவை திறந்து பார்த்த பொழுது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். கோப்பாய் பொலிஸார் சடலத்தை மீட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article