தெற்கு ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருளுடன் மீனவர்கள் கைது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் 200 கிலோகிராம் போதைப்பொருளுடன் இரண்டு இலங்கையை சேர்ந்த மீன்பிடிப் படகுகள் இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு படகுகளிலும் இருந்த 10 இலங்கை மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படைப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.

 

போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவர்கள் காலித் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article