திருலிங்கபுரத்துக்கு நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பால் வீதி மின்விளக்குகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு மேற்கு திருலிங்கபுரம் பகுதியில் வீதி விளக்குகள் பொருத்தப்படாமையால் இரவு வேளைகளில் அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பினர் அதற்கான மின்விளக்குகளை இன்று(செப்ரெம்பர் 17) கையளித்துள்ளனர்.

இன்று காலை 10:30 மணியளவில் நெடுந்தீவில் அமைந்துள்ள ஊரும் உறவும் அலுவலகத்தில், அமைப்பின் பிரதிநிதிகளால் திருலிங்கபுரம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களிடம் வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

கிராம அபிவிருத்தி சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மின்விளக்குகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான நிதி அனுசரணையினை அமைப்பின் உறுப்பினரும், புலம்பெயர்ந்து வசிப்பவருமான பாலசிங்கம் பாலசிறிதரன் வழங்கியிருந்தார்.

Share this Article