திருநாவற்குள வீதி திருத்த வேலைகள் பாா்வையிடப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபனின் நிதி ஒதுக்கீட்டில் திருநாவற்குளம் கிராமத்தில் வீதிகள் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

மாணிக்கதாசன் மைதான வீதி 206 மீற்றர் தூரம் கிரவலிடும் பணிகளுடன் , சிவன் ஆலய சுற்றுவட்ட வீதி 350 மீற்றர் கிரவலிடும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

வீதி அபிவிருத்தி தொடர்பாக கிராம மக்கள் கருத்து தெரிவிக்கையில் கடந்த 20 வருடங்களாக களிமண் வீதியாக இருந்த எமது கிராமத்தின் வீதியானது, வட்டார உறுப்பினரின் முயற்சியால் திருநாவற்குளத்தில் 90 வீதமான வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள்

கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, சனசமூக நிலைய உபதலைவர் அன்னலதா , விளையாட்டுக் கழக செயலாளர் புவிராஜ் மற்றும் நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபம் ஆகியோர் வீதி அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டனர்.

Share this Article