தரும்புரத்தில் 80 கிலோ கஞ்சாவுடன் குடும்பப்பெண் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமையநேற்று (ஜூன் 30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின்பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சாமீட்கப்பட்டுள்ளது.

79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை இவ்வாறு தர்மபுரம்பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55 வயதுடைய பெண்ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியைசேர்ந்தவர் 55 வயதுடைய பெண்ணையும் மற்றும் தடையப் பொருட்கள் இன்று (ஜூலை01) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்தப்பட்டது.

குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனபொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்

Share this Article