தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் நேற்று(13) இரவு 7 மணியளவில் மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்டபூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ளவிவசாயியான தந்தை ஒருவர் தனது வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுதுகொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்தஅவரது 8 வயதுடைய மகள் திடீரென கீழே விழுந்த நிலையில் உழவுஇயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article