தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு நெடுந்தீவு J/06 கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் (மே-30) சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
செபநாயகபுரத்தின் கடற்கரை, வீரபத்திரர் ஆலய சூழல் மற்றும் வியாகுல அன்னை கெபியின் முன் பகுதிகளில் இச்சிரமதான பணி இடம்பெற்றது.
பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம பொது மக்கள் ஒத்துழைப்புடன் இச்செயற்பாடு இடம்பெற்றதாகவும் மேற்படி வேலைத்திட்டத்தில் மரம் நடுகையும் இடம்பெற்றது.