நாரந்தனை சரவணை கர்ணந்தோட்டம் சிவசுப்பிரமணிய கோவிலில் சிறப்புச் சொற்பொழிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

யாழ்ப்பாணம் நாரந்தனை சரவணை கர்ணந்தோட்டம் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு “கந்தன் புகழ் பாடும் பாமாலை” என்னும் தொனிப்பொருளில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது.

ஆலயப் பிரதான மண்டபத்தில் கடந்த 24 ஆம் புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 7.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசகர், சமயஜோதி, கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைபில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் நேற்று (மே 30) செவ்வாய்க்கிழமை சிறப்புச்சொற்பொழிவை சைவப்புலவர் பொன். சந்திரவேல் அவர்கள் ” வடிவேல் இறைதாள் நினைவாய் ” என்னும் விடயப்பொருளில் சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

Share this Article