தனியார் கல்வி நிறுவனங்களின் அருகே இனிமேல் பொலிஸ் பாதுகாப்பு – கண்காணிப்பும் அதிகரிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சனி ஞாயிறு தினங்களில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களுக்கு  அண்மையில் பொலிஸாரின்  பிரசனத்தை அதிகரிப்பது என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும்  பாதுகாப்பு கடமையில்  ஈடுபடுத்த வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Share this Article