சுகாதாரப் பணி உதவியாளர்கள் 436 பேருக்கு நியமனக் கடிதங்கள் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுகாதாரப் பணி உதவியாளர்கள் 436 பேருக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் மனிதவள அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டின் இலவச சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நாளை (11/10) முற்பகல் மருதானை டவர் வளாகத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

இவ்வாண்டு அரச வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் சுகாதாரப் பணியாளர் உதவியாளர் மூன்றாம் தரத்திற்காக மூன்று கட்டங்களின் கீழ் 1,989 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர்.

எனினும், அவர்களில் சிலர் பணிக்கு சமூகமளிக்காமை, நியமனங்களை ஏற்றுக்கொள்ளாமை மற்றும் பணியைக் கைவிட்டுச் சென்றமை காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையில் தற்போது 436 பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

Share this Article
Leave a comment