சிறைக்கு போதைப்பொருள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தனது காலணிக்குள் மறைத்து போதைப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலுக்குள் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் அணிந்திருந்த காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 96 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 16.7 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொரளை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, மீட்கப்பட்ட போதைப்பொருட்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment