நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வெளிமாவட்ட அங்கத்தவர்களுக்கான சிறப்புக் கலந்துரையாடல் இன்று(ஓகஸ்ட் 27) காலை 10.30 மணிக்கு மு. அமிர்தமந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் நிறுவனமயமாக்கலின் உறுதித்தன்மை முன்னெடுத்தல், நெடுந்தீவின் அபிவிருத்தியின் முன்னெடுப்பும், திட்டமிடலுடன் கூடிய ஐந்து ஆண்டு திட்ட அறிக்கை தயாரித்தலும் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல் குழுவினை அமைத்தல், நெடுந்தீவிற்கு வெளியில் சர்வதேச, தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தல், கோரிக்கைகள் மற்றும் அதன் முன்னெடுப்புக்கான வழிகாட்டல்களை மக்களுக்கு வழங்கல், யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைப்பினை பதிவு செய்வதனூடாக வேறுநிறுவனங்களின் உதவியைப் பெற்று எமது பகுதிகளுக்கு வழங்குதல் மற்றும்
பாடசாலைகளின் அபிவிருத்திக்கான அரச கட்டமைக்கப்பட்ட செயற்திட்டங்களை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.
நெடுந்தீவின் அபிவிருத்தியின் முன்னெடுப்பும், திட்டமிடலுடன் கூடிய ஐந்து ஆண்டு திட்ட அறிக்கை தயாரித்தலும் அதற்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கான 07 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நெடுந்தீவின் உறவுகள் பலர் கலந்துகொண்டு தங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.