கனடாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்ப முயன்றவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் – யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தகவல்.
இலங்கையிலிருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவதற்கு திட்டமிட்ட நபரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
சந்தேக நபர் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவரிடமும் தலா மூன்றுஇலட்சம் முதல் ஐந்து இலட்சம் வரை பெற்றுக்கொண்ட குறிப்பிட்ட நபர் அவர்களை கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
கல்பிட்டியிலிருந்து படகுகள் மூலம் வெளிநாடொன்றிற்கு செல்ல முயன்ற 24 இலங்கையர்கள் கடற்படையினரால்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான லொறியொன்று காணப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டு;ள்ளனர்.
லொறிசாரதி உட்பட 24 பேர் படகொன்றிற்காக காத்திருந்தவேளை கைதுசெய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் போது அவர்கள் இலங்கையிலிருந்து வெளிநாடொன்றிற்கு சட்டவிரோதமாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் ஒன்பது பேர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் ஆறு பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் முல்லைத்தீவு திருகோணமலையை சேர்ந்தவர்களும் உள்ளனர் என தெரிவித்துள்ள கடற்படையினர் லொறிசாரதி புத்தளத்தை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளனர்.
இவர்கள் புத்தளத்திலிருந் லொறி மூலம் கல்பிட்டிக்கு கொண்டுசெல்லப்பட்டனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிpவத்துள்ளனர்.