புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தஒருவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (மே17) காலை 8 மணியளவில் இடம்பெற்றகைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பெரியபிகுளம் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்புஉற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
கோடா 1702 லீற்றர் , எரிந்த கோடா 30 லீற்றர், கசிப்பு 58 லீற்றர், பரல் 18, கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடனும்
தேவிபுரம் அ பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும்கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர்முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.