கொக்குத்தொடுவாய் மனித எச்சங்களில் துப்பாக்கி சன்னம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் தமிழீழ விடுதலைப்புலிகளின்உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் மேலும் ஏழு மனித எச்சங்கள்அடையாளம் காணப்படுள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்டஅகழ்வாராய்ச்சியின் 6வது நாளான நேற்று, மூன்று மனித எச்சங்கள் அடையாளம்காணப்பட்டுள்ளன.

அத்தோடு ஏற்கனவே இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நிறைவு நாட்களில்அடையாளம் காணப்பட்ட நான்கு மனித எச்சங்கள் அதழ்தெடுக்கப்படாதுஉள்ளன.

ஏற்கனவே இரண்டு கட்டங்களிலும் முழுமையாக அகழ்ந்து வெளியே எடுக்கப்பட்ட40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக ஏழு மனித எச்சங்கள் அடையாளம்காணப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் இவை முழுமையாக வெளியேஅகழ்ந்தெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்டஅகழ்வாய்வின், ஆறாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் நேற்று (ஜூலை10) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் தடயவியல்பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஆறாம் நாள்அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.

இரண்டாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கானஅலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அகழ்வுபணிகளை கண்காணிதார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக கொக்கிளாய் – முல்லைத்தீவுபிரதான வீதிக்கு கீழான பகுதி அகழப்பட்டு, அகழ்வாய்வுச் செயற்பாடுகள்ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் மூன்று மனித எச்சங்கள்இனங்காணப்பட்டுள்ளன.

மேலும் அந்த எலும்புக் கூட்டுத்தொகுதிகளோடு துப்பாக்கி சன்னங்கள் மற்றும்இராணுவ முகாம்களில் பயன்படுத்தப்படும் வேலிகம்பிகளின் துண்டுகள்என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எச்சங்களையும் வரும்நாட்களில் முழுமையாக வெளியே எடுக்க முடியும் என அகழ்வில் ஈடுபட்டுள்ளதொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் மனித உரிமைசட்டத்தரணி நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Share this Article