குழவி குத்தி முல்லைத்தீவில் ஒருவா் மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முள்ளியவளை முறிப்பு பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் குழவி குத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கருநாட்டுக்கேணியினை பிறப்பிடமாகவும், குமாரபுரம் முள்ளியவளையில் வசித்துவந்தவருமான 51 அகவையுடைய கந்தசாமி சத்தியநாதன் என்றவிவசாயி முறிப்பு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 28.02.21 அன்று மாலை விவசாய நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை குழவி குத்திற்கு இலக்காகி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் (28) உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர் இவரது உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Share this Article