குறிகாட்டுவானில் “சமுர்த்தி ஆரோக்கிய உணவக திறப்பு விழா”

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குறிகாட்டுவான் பகுதியில் “சமுர்த்தி ஆரோக்கிய உணவக திறப்பு விழா” நேற்றையதினம் (10.04) பி.ப 2.30 மணிக்கு  வேலணைப் பிரதேச செயலாளர்திரு க.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சரும் மாவட்டஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கெளரவ டக்ளஸ்தேவானந்தா கலந்து கொண்டு உணவகத்தை திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகம்திரு சி.சத்தியசீலன் அவர்களும் சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர் திரு F.C. சத்தியசோதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்தோடு  மாவட்ட அபிவிருத்திஒருங்கிணைப்புக் குழு தலைவரது  மாவட்ட இணைப்பாளர் மற்றும் நகரஅபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளரும் கலந்து கொண்டதுடன் மேலும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவித்தி உத்தியோகத்தர்கள், வங்கி கட்டுப்பாட்டுச்சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், சமுதாய மட்ட அமைப்பின் தலைவர்மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share this Article