குறிகட்டுவானில் மின்சாரம் தாக்கி கடற்படை உறுப்பினர் பலி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

குறிகட்டுவான் நயினாதீவு போக்குவரத்தில் ஈடுபட்டுவந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் பாதைப் படகு கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கடல் நீர்; உட்புகுந்து நீர்pல் முழ்கியுள்ளது.

இவ் நீரில் மூழ்கிய பாதைப்படகினை மீட்கும் பணிகள் கடந்த ஒருவாரமாக கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இவ்வாறான மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த கடற்படை சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கிய கடற்படை உறுப்பினர் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆயினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே அவர் உயிர் இழந்துள்ளதாக அறிய முடிகின்றது.

சடலம் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது

Share this Article