கிளிநொச்சியில் பல ஏக்கா் வயல்கள் நீாில் மூழ்கியுள்ளன.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பெய்துவரும் அடைமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அறுடைக்கு தயாராக இருந்த நிலையில், அதிகளவான மழை வீழ்ச்சியால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளன

இருப்பினும் எவ்வளவு ஏக்கர் அழிவடைந்துள்ளன என்பதனை வெள்ளம் வடிந்தோடிய பின்னரே மதிப்பீடு செய்யமுடியும் எனவும் கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Share this Article