கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு கஞ்சா கடத்தல் – பெண் உட்படஇருவர் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சாகடத்தியதாக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப்பொலிசார் இன்று (ஜனவரி07) தெரிவித்துள்ளனர்.

ஓமந்தைப் பொலிசார் மேற்கொண்ட விசேட வீதிசோதனை நடவடிக்கையின்போது கிளிநொச்சியில் இருந்து வவுனியாவிற்கு சென்ற மோட்டர் சைக்கிள்ஒன்றில் இருந்து 700 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த 36 வயதுடைய பெண் ஒருவரும்,  அவரதுசகோதரர் எனக் கூறப்படும் 30 வயதுடைய ஆண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து இரண்டு இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய்பணமும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஓமந்தைப் பொலிசார் மேலும்தெரிவித்துள்ளனர்.

Share this Article