கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மைதானத்திற்கான பாதையை விடுவிக்கஇராணுவம் இணக்கம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின்  மைதானத்திற்கான பிரதான பாதையைவிடுவிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலையின் மைதானத்திற்கான பிரதான பாதையில் அமைந்துள்ள  இராணுவமுகாம், மாணவர்களின் மைதானச் செயற்பாடுகளுக்கு அசௌகரியமாகஇருப்பதாக பாடசாலை சமூகத்தினால் அமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைதொடர்பாக  முன்னெடுத்த தொடர் நடவடிக்கையின் பயனாக, இராணுவமுகாமின் ஒரு பகுதியை விடுவித்து மைதானத்திற்கான பாதையை வழங்குவதற்குஇராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இராணுவத்தினரால் விடுவிக்கப்படவுள்ள பகுதியைநேற்றையதினம்(மே15) குறித்த பகுதிக்கு பொறுப்பான இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெவர்த்தன, மற்றும் அதிகாரிகள் சம்மந்தப்பட்டபகுதிகளை அமைச்சருக்கு காண்பித்தனர்.

Share this Article