காமினி ஜயவிக்ரம உடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான மறைந்த காமினி ஜயவிக்ரம பெரேராவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் அமைச்சரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள குருநாகல் கட்டுகம்பலாவில் உள்ள வீட்டிற்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர், அவரது மகனான வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசங்க ஜயவிக்ரம உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.

Share this Article