கல்மடுநகர் மூலிகைக் கிராமத்திற்கு கடற்றொழில் அமைச்சர் களவிஜயம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி கல்மடுநகர் கிராமிய சித்த வைத்தியசாலை மற்றும் மாகாணமூலிகைக் கிராமத்திற்கு கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுதலைவருமான ராமலிங்கம் சந்திரசேகர் நேற்று(ஜூலை03) களவிஜயமொன்றைமேற்கொண்டிருந்தார்.

குறித்த களவிஜயதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திஅவர்களும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, மூலிகை செய்கையில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும்நிலைமைகள் குறித்து துறைசார் அதிகாரிகள், விவசாயிகளுடன்கலந்துரையாடினார்.

மேலும், தோட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எதிர்காலமுன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த 100 ஏக்கர் காணி கொண்ட மூலிகை தோட்டம், சுதேச மருத்துவத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பளிக்கும் நிலையமாகஉருவாக்கப்படும். இது சுகாதாரத்தையும் கிராமிய பொருளாதாரத்தையும்மேம்படுத்தும் நோக்கில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மூலிகை தோட்டத்தை மேலும் விருத்தி செய்வது தொடர்பில் ஆராய்ந்துஅடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை செய்துதருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Share this Article