கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் கன்னியமர்வு தவிசாளர் அருணாச்சலம்வேழமாலிகிதன் தலைமையில் நேற்றையதினம் (ஜூன்13) நடைபெற்றது.

37உறுப்பினர்களைக்கொண்ட கரைச்சி பிரதேச சபையில் இலங்கைதமிழரசுக்கட்சி சார்பாக 20உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 06 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சார்பாக 04 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக 02 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக 02 உறுப்பினர்களும், ஈழ மக்கள்ஜனநாயகக்கட்சி சார்பாக 01 உறுப்பினரும், சுயேட்சைக்குழு சார்பாக 02 உறுப்பினர்களும் கரைச்சி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
கரைச்சி பிரதேச சபையை தமிழரசுக்கட்சி பெரும்பாண்மைஆசனங்களைக்கொண்டு ஆட்சியமைத்துள்ளது.தவிசாளராக அருணாச்சலம்வேழமாலிகிதன் அவர்களும் உபதவிசாளராக புஸ்பநாதன் சிவகுமார் அவர்களும்தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நேன்றைய கன்னியமர்வில் உறுப்பினர்களின் அறிமுக உரை மற்றும் கன்னிஉரைகள் இடம்பெற்றன.