கத்திமுனையில் வழிப்பறி- மூவர் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியாவில் பெண் ஒருவரை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில்கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகதெரிய வருகிறது. 


கடந்த 17 ஆம் திகதி முகத்தை மூடி துணிகளால் கட்டியபடி நின்ற மூன்றுஇளைஞர்கள் பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில்கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், அவரின் மோட்டர் சைக்கிளையும் பறித்து சென்றதனை தொடர்ந்து, இச் சம்பவம்தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை காவல்நிலையகுற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்த நிலையில் விசாரணைகளின்போது குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்கள்காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

நகைகள் யாவும் நகைகடை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதுடன் பறித்துசெல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் கனகராயன்குளம் பகுதியில் விற்கப்பட்டநிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக இரண்டு பென்ரன் மற்றும்லப்டொப் என்பனவும் சந்தேகநபர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிகவிசாரணைகளின் பின் சந்தேகநபர்கள் மூவரையும், சான்றுப் பொருட்களையும்நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Share this Article