கசூரினா கடற்கரையில் உயிர்காப்பு கண்காணிப்பு கோபுரம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

காரைநகர் கசூரினா கடற்கரைக்கு வருகை தரும் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய, காரைநகர் பிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட உயிர்காப்பு கண்காணிப்பு கோபுரம் இன்று (ஓகஸ்ட் 25) திறந்து வைக்கப்பட்டது.

இந்த கோபுரம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாகப்பார்க்கப்படுவதுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த கோபுரம் உயரமான இடத்தில் இருப்பதால், உயிர்காப்பு படையினர் கடற்கரையின் அனைத்துப் பகுதிகளையும் தெளிவாகக் கண்காணிக்க முடியும் என்பதுடன் ஆபத்தில் சிக்கியிருப்பவர்களுக்கை உடனடியாக உதவ முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article