எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கரிகணன் படகுச் சேவை இல்லை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு குறிகாட்டுவான் இடையிலான கரிகணன் பயணிகள் படகுசேவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02) இடம்பெறமாட்டாது என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா நடைபெறுவதால் அதற்கென பெருந்திரளான பக்தர்கள் செல்வதற்கான படகுகள் துறைமுகப் பகுதியை பயன்படுத்துவதால் படகினை துறைமுகத்தில் அணைப்பது சிரமத்துக்குரியது என்பதால் குறித்த தினத்தில் மாத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படகு சேவையானது நெடுந்தீவில் இருந்து பகல் 11:30 மணிக்கு புறப்பட்டு மாலை 2.30 மணிக்கு குறிகாட்டுவானில் இருந்து மீள திரும்பும் வகையில் சீராக இயங்கும் ஒரு பயணிகள்சேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article