ஊர்காவற்றுறையில் தொடர் காய்ச்சலால் குடும்பப் பெண் உயிரிழப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறையில் 20 நாட்கள் தொடர் காய்ச்சல் காரணமாக குடும்பப் பெண் ஒருவர் நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட்28) உயிரிழந்துள்ளார்.

இதன்போது நாரந்தனை மத்தி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஏழு பிள்ளைகளின் தாயார் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் கிளிநொச்சியில் மகள் வீட்டில் இருந்தவேளை கடந்த 7ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டதால் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

பின்னர் 17ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னரும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 19 ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர் 27ஆம் திகதி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரிநமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு, உடற்கூற்றுபரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Share this Article