ஊர்காவற்றுறையில் டீசலை அருந்திய 9 மாதக் குழந்தை பலி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறையில் டீசலை அருந்திய ஆண் குழந்தை ஒன்று நேற்றுசனிக்கிழமை (மார்ச்22) அதிகாலை உயிரிழந்துள்ளது.

ஊர்காவற்துறை, நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த  ஒரு வயது 9 மாதங்கள்நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடந்த மார்ச் 18 அன்று குழந்தையின் தந்தை லான்ட்மஸ்டர் திருத்த வேலையில்ஈடுபட்டுள்ளார். பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதன்போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலைஅருந்தி  குழந்தை மயக்கமுற்றது.

பின்னர் குழந்தை ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைசிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச்22 ) அதிகாலை 2.30 மணியளவில்உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதன் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share this Article