ஊர்காவற்றுறையில் இறைச்சிக்காக கன்றுத்தாச்சி மாடு களவாக வெட்டப்பட்டது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்றுறை சுருவில் கிராமத்தில் உயர் ரக கேப்பை இன கன்றுத்தாச்சிவளர்ப்பு மாடு ஒன்று இனந்தெரியாத நபர்களால் இறைச்சிக்காகவெட்டப்பட்டதுடன் கன்று வெளியே எறியப்பட்ட நிலையில் காணப்பட்டது.

சம்பவத்தினை அறிந்த புளியங்கூடல் பகுதி இளைஞர்களால் கள்வர்கள் விரட்டப்பட்டவேளை , மோட்டார் சைக்கிலும் ஒருதொகை இறைச்சியும்மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக நேற்று அதிகாலை மூன்று மணி முதல் பொலிசாருக்குதகவல் தொடர்சியாக பொதுமக்களாலும், தீவக சிவில் சமூகத்தினராலும்  வழங்கிய போதும் அவர்கள் காலை ஏழு மணிக்கே சம்பவம் நடந்த இடத்திற்குவருகை தந்ததாகவும் , பொலிசாரின் இவ் அலட்சியப் போக்கு தொடர் பாகஐனதிபதிக்கு முறையிடுவது தொடர்பாக தீவக சிவில் சமூகத்தினர் நடவடிக்கைமேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article