ஊர்காவற்றுறை குளத்தில் இருந்து சிறுமிகளின் சடலங்கள் மீட்பு- உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனாவில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குளத்தில் விழுந்து உயிரிழந்தஇரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று (ஜூன்01) இரவுகண்டெடுக்கப்பட்டுள்ளன.

 11 வயது மற்றும் 5 வயது சகோதரிகளின் சடலங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமிகள் இருவரும் நேற்று (ஜூன்01) பிற்பகல் துவிச்சக்கர வண்டியில்கடைக்குச் சென்ற நிலையில் நிலையில், நீண்டநேரம் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடிச்சென்ற வேளையில் இருவரின் சடலங்கள் பாதுகாப்பற்ற பாதையோர குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சடலங்கள் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு இன்று (ஜூன் 02) காலை மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article