இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம்’ திட்டத்தின் கீழ், ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறைக்குச் செல்லும் வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணிகளுக்காக ரூ.90 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றத்தை நேற்று (16/08) நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
புனரமைப்பு பணிகள் உயர்தரத்தில், திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கண்ணகை அம்மன் இறங்குதுறையை அடுத்த ஆண்டு மேலும் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் இதற்காக தற்போது ரூ.160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை முழுமையாக நிறைவு செய்ய சுமார் ரூ.250 மில்லியன் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தேவையான கூடுதல் ரூ.90 மில்லியன் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அந்த நிதியை வழங்குவதற்கான பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.