குறிகாட்டுவான் துறைமுக கடலில் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுடன் கண்டன போராட்டம் – இந்திய மீனவர்களின் அத்துமீறிலை கண்டித்து!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்திய மீனவர்களினால் தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையை கண்டித்து குறிகாட்டுவான் துறைமுக கடலில் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுடன் இன்று புதன்கிழமை (29/07) காலை படகுகளுடன் கண்டன போராட்டம் இடம்பெற்றது

நயினாதீவு கடற்தொழில் சங்கங்களின் ஏற்பாட்டில் குறிகாட்டுவான் இடைப்பட்ட கடற்பரப்பில் வெளியிணைப்பு இயந்திரப் படகுகளுடன் தொழிலாளர்கள் கண்டன கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்

அரசியல் கட்சிகளின் ஆதரவின்றி தீவக மீனவர்கள் ஒன்றிணைந்து தங்கள் துயரங்களை துடைத்தெறிய ஒன்றுபட்டு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்

போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து காட்டப்பட்டதுடன் நாளையதினம் வடமாகாண ஆளுநரூடாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கடந்த சனிக்கிழமை (18/07) அதிகாலை நெடுந்தீவு கடலில் போடப்பட்டிருந்த தீவக பிரதேசத்தைச் சேர்ந்த  மீனவர்களின் கடற்தொழில் உபகரணங்கள் சூறையாடப்பட்டதை கண்டித்தும், தொடர்ந்தும் இடம்பெறும் அத்துமீறலை எதிர்த்தும் இப்போராட்டம் இடம்பெற்றது

தினமும் இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு , உட்பட தீவக பிரதேச கடற்தொழில் சங்கங்களின் உறுப்பினர்கள் அணிதிரண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment