ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவுஇயங்குகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஊர்காவற்துறையின் ஆதார வைத்தியசாலை வளர்ச்சியில் இன்னொருமைல்கல்லாக இரத்த வங்கி பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இரத்த வங்கிப் பிரிவானது கடந்த  2024 ஆகஸ்ட்  இறுதிப்பகுதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தீவக மக்களுக்கு இவ் இரத்த வங்கி பிரிவின் சேவைகள் பெரும் வரப்பிரசாதமாகஅமையும் என்பதில் ஐயமில்லை.

ஆரம்ப நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் Mrs. Dr. ரிஷானி சேரலாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. T. சத்தியமூர்த்தி, யாழ் பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர்  Dr.  A. கேதீஸ்வரன், தேசிய இரத்த வங்கி பணிப்பாளர் Dr. L. எதிரிசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article