உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சாதனை !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்நாட்டு இறைவரி திணைக்களம் இந்த ஆண்டுக்கான தனது வரி வருவாய் இலக்கில் கணிசமான உயர்வைப் பதிவு செய்துள்ளதுடன், செப்டம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் ஒன்பது மாதங்களுக்குள் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரி இலக்கில் 85 சதவீதத்தைப் பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இக்காலப்பகுதியில் திணைக்களத்தினால் மொத்தம் 2,040 பில்லியன் ரூபா வரி வருவாயாகச் சேகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே ஒன்பது மாத காலத்தில் சேகரிக்கப்பட்ட 1,642 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 24 சதவீத வளர்ச்சியாகும். அதாவது, கடந்த ஆண்டை விட 398 பில்லியன் ரூபா கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளுக்குள்ளேயே 2 டிரில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி வருவாயைச் சேகரித்துள்ளமை நாட்டின் பொருளாதார மீட்சிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

தற்போது எட்டப்பட்டுள்ள 85 சதவீத சாதனையின் அடிப்படையில் பார்க்கும்போது, நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான திணைக்களத்தின் முழுமையான வரி வருவாய் இலக்கு சராசரியாக 2.4 டிரில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment