உடையார்கட்டில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்றஉந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 வயதுடைய குடும்பஸ்தர்ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (செப். 20)  இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வெள்ளப்பள்ளம் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மைவீதியினை நோக்கி  பயணித்த உந்துருளி ஒன்றும் பரந்தன் பக்கம் இருந்துபுதுக்குடியிருப்பு பக்கம் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வேகமாக உந்துருயில் பயணித்த உடையார் கட்டு தெற்கு குரவில்பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறுபிரதேச மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்உடையார்கட்டு,சுதந்திரபுரம்,மூங்கிலாறு, பகுதிகளில் அண்மை காலமாகவிபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article