ஆர்.எம். பார்க்ஸின் எரிபொருள் விநியோக சேவை மே10 ஆம் திகதி முதல்ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அமெரிக்காவின் ஆர் எம் பார்க்ஸ் நிறுவனம் அடுத்த மாதம் முதல் இலங்கையில்எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் எரிபொருள்விநியோக செயற்பாடுகளை நாட்டின் ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சுதெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்துக்கு சொந்தமான டீசல் மற்றும் பெட்ரோல் தாங்கிக்கப்பல்கள் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள போதிலும்எரிபொருள் விநியோகத்திற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரேஎரிபொருளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சுமேலும் தெரிவித்துள்ளது.

ஆர். எம். பார்க்ஸ் நிறுவனத்திற்கு, நாட்டில் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்ஊடாக எரிபொருளை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article