தற்போதைய கொவிட் 19 தொற்றுக் காலப்பகுதியில் பாடசாலைகளில் ஆசிரியாக்ள் ஒன்று கூடுவதற்கோ அல்லது ஆசிரியர் கூட்டங்கள் நடாத்தப்படுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இளங்கோவன் அவர்கள் தெரிவித்தார்
இது தொடர்பாக ஏற்கனவே வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு சுற்று நிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீறும் பட்சத்தில கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்