இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 6.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் பெரும்பாலும் மாற்றமின்றி நிலையாகக் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசமுள்ள திறைசேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்களின் பெறுமதி, முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றமையும்