இலங்கைக் குமரித்தமிழ்ப் பணிமன்றம் நடாத்தும் அமரர் உயர்திரு வே.கதிரவேலு (அப்பு) அவர்களின் நினைவரங்க நிகழ்வு நாளை(ஓகஸ்ட்23) சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் முன்னைநாள் முதல்வர் மீனலோயினி இதயசிவதாசு அவர்களின் தலைமையில் கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள கிளிநொச்சி இந்துக் கல்லூரி மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு இடம்பெறும் நிகழ்வின் விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அரங்க நிகழ்வுகளாக அப்புவின் நினைவரங்கப் பேருரை, வைரவிழாக் கண்ட பல்தொழில்சார் மூத்தகுடிகள் கௌரவிப்பு, கிளிநொச்சி மாவட்ட பல்கலைக்கழக புகுமுக மாணவர்கள், கலைப்பிரிவு கௌரவிப்பு என்பவற்றுடன் இலங்கைக் குமரித்தமிழ்ப் பணிமன்ற நிறுவுனர் நா.வை.குமரிவேந்தன் அவர்களின் “ஆய்வாளன்” நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளது.